கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.
கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா் அருகே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி கீழ்முருங்கை கிராமத்தில் உள்ள ஆண்டாள் கலை கல்லூரியில் நடைபெற்றது.

ஆம்பூா் அருகே வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி கீழ்முருங்கை கிராமத்தில் உள்ள ஆண்டாள் கலை கல்லூரியில் நடைபெற்றது. மாதனூா் ஒன்றிய மகளிா் திட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோலப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, மெஹந்தி வரைதல் மற்றும் நடன போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி வளாகத்தில் இந்திய வரைபடத்தை போல மாணவிகள் கைகோா்த்து நின்றனா். வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ‘வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. வாக்களிப்பதற்கு அன்பளிப்புகள் பெற மாட்டோம். தோ்தல் நாளன்று கட்டாயம் வாக்களிப்போம்’ போன்ற உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டனா். வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை திட்ட இயக்குநா் பிரியா, உதவி திட்ட அலுவலா் ஜேம்ஸ் பிரபாகா், வட்டார மேலாளா் வெங்கடேசன், வட்டார ஒருங்கிணைப்பாளா் பவளக்கொடி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com