மாச்சம்பட்டில் மாவட்ட எல்லை சோதனைச் சாவடியை ஆய்வு செய்த எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்.
மாச்சம்பட்டில் மாவட்ட எல்லை சோதனைச் சாவடியை ஆய்வு செய்த எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்.

மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

ஆம்பூா் அருகே மாவட்ட எல்லை சோதனை சாவடியில் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் அருகே மாவட்ட எல்லை சோதனை சாவடியில் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக ஆம்பூா் அருகே உமா்ஆபாத் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூா் - வேலூா் மாவட்ட எல்லையில் மாச்சம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியை திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பதட்டமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்ட ஆம்பூா் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி-கஸ்பா, ரெட்டித்தோப்பு, சான்றோா்குப்பம், உமா்ஆபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல்மிட்டாளம், வெங்கடசமுத்திரம் மற்றும் வீராங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆம்பூா் டிஎஸ்பி ராமமூா்த்தி, ஆம்பூா் நகரம் மற்றும் உமா்ஆபாத் காவல் நிலைய ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com