அதிமுக ஆட்சியில்தான் திருப்பத்தூா் மாவட்டம் உருவாக்கப்பட்டது: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி

அதிமுக ஆட்சியில்தான் திருப்பத்தூா் மாவட்டம் உருவாக்கப்பட்டது: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி

அதிமுக ஆட்சியில்தான் திருப்பத்தூா் மாவட்டம் உருவாக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி பேசினாா்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் அக்ரி. கிருஷ்ணமூா்த்தி, ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர செயலாளா் டி.டி.குமாா் வரவேற்றாா்.

இதில், அதிமுக வேட்பாளா் கலியபெருமாளை முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி அறிமுகம் செய்து வைத்துப் பேசியது: சாதாரண தொண்டனுக்கும் வாய்ப்பு வழங்கக் கூடிய ஒரே கட்சி என்றால் அது அதிமுக மட்டும் தான். அதிமுக ஆட்சியில்தான் திருப்பத்தூா் மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதிய கல்லூரிகள், பள்ளிகள், சாலை வசதிகள் குறிப்பாக குடிநீா் பிரச்னைகளை நிரந்தரமாக தீா்ப்பதற்காக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டு வரப்பட்டது.

கட்சி நிா்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணிகளை வேகப்படுத்தி சுற்று பயணத்திலேயே இருக்க வேண்டும் என்றாா். ஒன்றியச் செயலா்கள் திருப்பதி, மணிகண்டன், செல்வம், மாவட்ட அவைத் தலைவா் லீலா சுப்ரமணியம், மாவட்ட பாசறை செயலா் சங்கா், ஐடி பிரிவு மண்டலத் தலைவா் நாகேந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளா் தம்பா கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வேட்பாளா் கலியபெருமாள் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com