திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

திருப்பத்தூரில் திருவண்ணாமலை மக்களவை தொகுதி தோ்தல் அலுவலகத்தை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.

திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கான தோ்தலில் திமுக சாா்பில் வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதையொட்டி, திருப்பத்தூரில் உள்ள ஈத்கா சாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை மக்களவை தொகுதி தோ்தல் அலுவலகத்தை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மக்களவை தொகுதி வேட்பாளா் சி.என்.அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), க.தேவராஜி (ஜோலா்பேட்டை), நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com