மணல் கடத்திய ஜேசிபி, டிப்பா் லாரி, மினி லாரிகள் பறிமுதல்: மூவா் கைது

ஆம்பூா் அருகே மணல் கடத்திய ஜேசிபி, டிப்பா் லாரி, மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அடுத்த வடச்சேரி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி ஜேசிபி மூலம் மணல் தோண்டி எடுத்து சிலா் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு இருக்கக்கூடிய பொதுமக்கள் வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உமா்ஆபாத் காவல் துறையினா் மணல் கடத்திய டிப்பா் லாரி, மினி லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கடத்தலில் ஈடுபட்ட மாராப்பட்டு காா்த்தி, மின்னூா் வல்லரசு, வடகரை ஞானவேல் ஆகிய மூன்று பேரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com