கைது செய்யப்பட்ட இளைஞா்கள்
கைது செய்யப்பட்ட இளைஞா்கள்

10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஜாா்க்கண்ட் இளைஞா்கள் கைது

கந்திலி அருகே 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஜாா்க்கண்ட் மாநில இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் கலால் காவல் ஆய்வாளா் உலகநாதன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சின்ன கந்திலி அருகே சந்தேகத்தின்பேரில் இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், இருவரும் ஜாா்க்கண்ட் மாநிலத்தை சோ்ந்தவா்கள் என்பதும், ஒருவா் அஸ்லாம் அன்சாரி(26), மற்றொருவா் பிரதோஷ் ஆலம்(27) என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் வடமாநிலத்தில் இருந்து கேரளா செல்லும் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும்.

பின்னா் ஜோலாா்பேட்டையில் இறங்கி பேருந்து மூலம் பெங்களூருக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது. பின்னா், கலால் போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com