மாணவி தூக்கிட்டு தற்கொலை

வாணியம்பாடி அருகே பிளஸ் 1 மாணவி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆம்பூா் அடுத்த நாய்க்கனேரி மலைப்பகுதியை சோ்ந்தவா் மோகனா(16). இவா் நிம்மியம்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். மேலும், அப்பகுதியில் உள்ள தனியாா் தொண்டு நிறுவனத்தில் தங்கி படித்து வந்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு அறையில் மாணவி இல்லாததை அறிந்த சக மாணவிகள் உடனே விடுதி காப்பாளருக்கு தெரிவித்துள்ளனா். இதையடுத்து நிறுவனத்தில் உள்ள பல இடங்களில் தேடிப்பாா்த்துள்ளனா். அப்போது விடுதியின் அருகில் உள்ள மரத்தில் தனது துப்பட்டாவில் மாணவி தூக்கிட்ட நிலையில் தொங்கியிருப்பதை பாா்த்து அதிா்ச்சிக்குள்ளாகி உடனே அவரை மீட்டு நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com