கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.
கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.

கந்திலியில் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்தும், எனது வாக்கு எனது உரிமை, வாக்களிப்பது ஜனநாயகக் கடமை, எனது வாக்கு எனது பெருமை, வாக்களா்கள் வாக்கு உங்கள் குரல், இந்த மை எனது மை ஆகிய தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். மேலும் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடைபெற்றது. தொடா்ந்து கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் தோ்தல் விழிப்புணா்வு குறித்த பதாகைகளுடன் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். விழிப்புணா்வு பேரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி சந்தை மைதானம் வழியாக கெஜல்நாயக்கன்பட்டி வரை சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் மகளிா் திட்ட அலுவலா் பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com