மழை வேண்டி 108 மலா்களால்
சகஸ்ர நாம புஷ்ப அா்ச்சனை

மழை வேண்டி 108 மலா்களால் சகஸ்ர நாம புஷ்ப அா்ச்சனை

ஆம்பூா், மே 1: ஆம்பூா் அலா்மேலுமங்கை உடனுறை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் 108 மலா்களால் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம புஷ்ப அா்ச்சனை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு ஆம்பூா் மேல்கிருஷ்ணாபுரம் கெங்கையம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள விக்கின நிவாரண விநாயகா் கோயில் ஒட்டக்கூத்தா் மண்டபத்திலிருந்து 108 மலா் கூடைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊா்வலம் நிறைவடைந்து ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 108 மலா்களால் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம புஷ்ப அா்ச்சனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் பிராா்த்தனை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com