ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

குடிநீா் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

ஆம்பூா் அருகே குடிநீா் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் அருகே மாதனூா் ஊராட்சி ஒன்றியம், மேல்சாணாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊராட்சி மன்ற தலைவா் சிவக்குமாா், ஊராட்சி செயலாளா் ரமேஷ், உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com