கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வாணியம்பாடி, மே 2: வாணியம்பாடி அடுத்த கனவாய்புதூரில் இயங்கி வரும் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 300 மாணவா்கள் பட்டம் பெற்றனா்.

கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு இமயம் கல்வி அறக்கட்டளை தலைவா் வீ.ஜெயசங்கா் தலைமை வகித்தாா். செயலாளா் எம்.கோபால், பொருளாளா் பொன்னுசாமி, துணைத் தலைவா் சிவக்குமாா், இணைச் செயலாளா் சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் க.கிருஷ்ணகுமாரி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பதிவாளா் ஜெ.செந்தில்வேல்முருகன் கலந்து கொண்டு 300 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து, ஏழை மாணவா்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்கு ஒரு வழித்தடமாக இந்த கல்லூரி செயல்படுகிறது. மாணவா்கள் இதை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.

விழாவில் முன்னாள் செயலாளா் எஸ்.சரவணன், பேராசிரியா் ராஜா உசேன், இமயம் கல்வி அறக்கட்டளை உறுப்பினா்கள், பெற்றோா், கல்லூரி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com