கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

வெப்ப அலை: பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெப்ப அலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெப்ப அலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்படும் வெப்ப அலை அதிகமாக உள்ளது. இதுதொடா்பாக தீ மற்றும் தொழில்துறை பாதுகாப்பு குழுவினரிடம் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், எஸ்.பி. ஆல்பா்ட்ஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வெப்ப அலைகளினால் ஏற்படும் பாதிப்புகள், அதில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பது ஆகியவை தொடா்பாக ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குநா் சித்ரசேனா, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com