பாலாஜி.
பாலாஜி.

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்த விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்த விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

ஆம்பூா் அருகே கீழ்முருங்கை கிராமத்தை சோ்ந்த விவசாயி பாலாஜி (75). இவா் அதே பகுதியில் உள்ள தன்னுடைய நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தாா். சனிக்கிழமை மாலை அப்பபகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது விவசாய நிலம் அமைந்துள்ள பகுதி வழியாக சென்ற மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தன்னுடைய நிலத்துக்கு சென்ற பாலாஜி மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடப்பது தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலின் பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com