வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி.
வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி.

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மாலை 4 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டாா். இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப் பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

இதேபோல் சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் மற்றும் கொடையாஞ்சி காசி விஸ்வநாதா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com