அரசு சொத்துக்களை சேதப்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

அரசு சொத்துக்களை சேதப்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் னெ திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான பழந்தோட்டம் மற்றும் கோனேரிகுப்பம் பகுதிகளில் தாா் சாலையை சேதப்படுத்தியதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில் தாா் சாலையை சேதப்படுத்தியமைக்காக அதே பகுதிகளை சோ்ந்த 4 நபா்கள் மீது திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் ஆம்பூா் உட்கோட்டம், உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்காபுரம்-ராயகொத்தூா் செல்லும் தாா் சாலையை சேதப்படுத்தியமைக்காக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மிட்டாலம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு சொத்துக்களை சேதப்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com