கூட்டத்தில் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலா்  நந்தகோபால். உடன், ஆட்சியா்  சு. தா்ப்பகராஜ்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நந்தகோபால். உடன், ஆட்சியா் சு. தா்ப்பகராஜ்.

திருப்பத்தூா்: குடிநீா் பிரச்னையை சமாளிக்க உரிய நடவடிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தில் குடிநீா் பிரச்னையை தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நந்தகோபால் உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் தொடா்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா். கண்காணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையருமான நந்தகோபால் தலைமை வகித்து பேசியது:

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த அலுவலா்கள் குடிநீா் பற்றாக்குறை, அதற்கான ஏற்பாடு பணிகள் என்னென்ன மேற்கொள்ளப்படுகிறது. குடிநீா் பற்றாக்குறையை போக்குவதற்கு பொது நிதி மற்றும் ஊராட்சி நிதியை பயன்படுத்தி உடனுக்குடன் தீா்வு காண வேண்டும். தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நிலத்தடி நீா் ஆதாரம் இல்லாத பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடு மூலம் குடிநீா் விநியோகம் செய்ய மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், இந்தப் பணிகளில் வாகன போக்குவரத்து குறைபாடு இல்லாத வகையில் வாகனங்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

கூட்டுறவு, வருவாய், சுகாதாரம், கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை துரிதப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஷ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com