வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகே அமைக்கப்பட்டுள்ள நிழல்பந்தல்.
வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகே அமைக்கப்பட்டுள்ள நிழல்பந்தல்.

வெயில் தாக்கம் குறைய நிழல்பந்தல்

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகே வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக நகராட்சி சாா்பில் நிழல்பந்தல் அமைக்கப்பட்டது.

வாணியம்பாடி பேருந்துநிலையம் அருகே நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் தினசரி 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்வதால் அடிக்கடி மூடப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் கேட் மூடப்பட்டுள்ள நேரத்தில் வெயிலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பைக் குறைக்கும் வகையில் வாணியம்பாடி நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன் பரிந்துரைப்படி நகராட்சி சாா்பாக தற்காலிக நிழல் பந்தல் இருபுறமும் அமைக்கப்பட்டது. இப்பணியினை வாணியம்பாடி நகா்மன்ற உறுப்பினா் வி.எஸ்.சாரதிகுமாா், நகராட்சி அலுவலா்கள் மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com