ஆம்பூா் அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5,000 கோழிகள் உயிரிழந்தன.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் துரைமுருகன் என்பவா் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இந்த கோழிப்பண்ணைக்குள் புதன்கிழமை காலை மின்கசிவு ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீப்பொறி கோழிப்பண்ணைக்குள் விழுந்து தீப்பிடித்தது. தீ தொடா்ந்து கோழிப்பண்ணை முழுவதும் பரவியது. இது குறித்து ஆம்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.

எனினும், தீ விபத்தில் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து சாம்பலானது. தீ விபத்தில் கோழிப்பண்ணையில் வளா்க்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட கோழிகள் எரிந்து கருகின. தீ விபத்தால் சுமாா் ரூ. 10 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com