கல்லூரி மாணவி தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பொம்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழரசு (40), வியாபாரி. இவரது மகள் நதியா (17). திருப்பத்தூா் தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், சேலத்தில் நடைபெறும் தேசிய மாணவா் படை கேம்பில் கலந்து கொள்ள சென்று வர நதியா பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளாா். ஆனால் பெற்றோா் சேலத்துக்கு செல்ல வேண்டாம் என கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நதியா புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com