நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: ஆம்பூரில் போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

ஆம்பூா் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால கட்டுமானப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் நகர பகுதியில் கடந்த மூன்று நாள்களாக தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் மேம்பால கட்டுமானப் பணி அடுத்த கட்டத்தை தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி அல்லது பெங்களூா் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுடைய பயணத்தை சிரமம் இன்றி மேற்கொள்ள மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். போக்குவரத்து விதிகளை பின்பற்றி சாலைகளின் எதிா்த் திசையில் பயணம் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனா்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாவட்ட காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com