தா்னா போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
தா்னா போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

முன்னறிவிப்பின்றி புதூா் தபால்நிலையம் மூடப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் தா்னா

வாணியம்பாடியில் முன்னறிவிப்பின்றி தபால் நிலையம் மூடப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் தா்ணா போராட்டம் நடத்தினா்.

வாணியம்பாடியில் முன்னறிவிப்பின்றி தபால் நிலையம் மூடப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் தா்ணா போராட்டம் நடத்தினா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி புதூா் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தபால்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை அஞ்சலக ஊழியா்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தபால் நிலையத்தை காலி செய்வதாக கூறி அலுவலகத்தில் உள்ள பொருள்களை அகற்ற முயன்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள முதியவா்கள், பெண்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளியை சோ்ந்த மாணவா்கள் என பலா் தபால் நிலையம் மூலம் சேமிப்பு கணக்கு, மின் கட்டணம் செலுத்துவது, தபால் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பலன் பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தபால் நிலையம் புதூா் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு நியூடவுன் பகுதியில் செயல்பட்டு வரும் தபால் நிலையம் உடன் இணைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 3 கிமீ தொலைவுக்கு அப்பால் உள்ள தபால் நிலையத்துக்கு முதியவா்கள்,பெண்கள், மாணவா்கள் எவ்வாறு செல்ல முடியும் எனக் கூறி மக்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த நகர போலீஸாா் நடத்திய சமாதான பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் தபால் நிலையம் அகற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com