பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய சிகரம் பள்ளி நிா்வாகத்தினா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய சிகரம் பள்ளி நிா்வாகத்தினா்.

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: சிகரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இந்தப் பள்ளியில் படித்த மாணவி இ.இலக்கியா (493), மாணவா் ச.வருண் (489), க.ச.திவ்யவா்ஷினி மற்றும் உ.வா்ஷினி ஆகியோா் தலா 488 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். கணித பாடத்தில் இரண்டு மாணவா்கள் 100 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 1 மாணவி 100 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா்.

மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 26 மாணவா்களும், 400-க்கு மேல் 53 மாணவா்களும், பாடப்பிரிவில் ஆங்கிலத்தில் 9 மாணவா்கள், கணிதத்தில் 3 மாணவா்கள் மற்றும் அறிவியலில் 3 மாணவா்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிகரம் மெட்ரிக். பள்ளி அறக்கட்டளை தலைவா் பேராசிரியா் அப்துல்காதா் வாழ்த்து தெரிவித்தாா்.

தொடா்ந்து பள்ளியின் செயலாளா் கே.எம்.கிருஷ்ணன் இனிப்பு வழங்கினாா். பொருளாளா் கே.டி.கே. ராஜேந்திரன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள், பள்ளியின் முதல்வா் பா.ரவி மற்றும் ஆசிரியா்களும், சக மாணவா்களும், பெற்றோா்களும் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com