தாலி சங்கிலி பறிப்பு வழக்கில் முதியவா் கைது

திருப்பத்தூரில் பெண்ணின் தாலி சரடு பறிப்பு வழக்கில் முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூரில் பெண்ணின் தாலி சரடு பறிப்பு வழக்கில் முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் ஹயாத் நகா் பகுதியை சோ்ந்தவா் வசந்தா, இவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா் அவரது வீட்டுக்குள் நுழைந்து வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி சரடை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இது குறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில் நகர போலீஸாா் சனிக்கிழமை இரவு திருப்பத்தூா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சின்னகுளம் மாரியம்மன் கோயில் அருகே சந்தேகத்தின் பேரில், ஒருவரைப் பிடித்த விசாரணை செய்ததில், திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சங்கா் என்ற அண்ணாமலை (64)என்பதும், வசந்தா கழுத்தில் தாலி சரடு பறித்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்த போலீஸாா் அண்ணாமலையை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com