ஸ்ரீ ராமானுஜா் ஜெயந்தியில் பங்கேற்ற பக்தா்கள்.
ஸ்ரீ ராமானுஜா் ஜெயந்தியில் பங்கேற்ற பக்தா்கள்.

ஸ்ரீ ராமாநஜா் 1,007-ஆவது ஜெயந்தி

திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை 1,007-ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் ஞாயிற்றுக்கிழமை 1,007-ஆவது ஜெயந்தி விழா நடைபெற்றது.

ஸ்ரீ ராமானுஜா் 1007-ஆவது ஜெயந்தியை முன்னிட்டு திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் மடத்தின் உற்சவ மூா்த்தியான ஸ்ரீசீதா சமேத கோதண்டராமா், லக்ஷ்மணா் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னா் ஸ்ரீ தன்வந்திரி ஹோமம்,ஸ்ரீ சக்கரத்தாழ்வாா் ஹோமம் நடைபெற்றது. அதையடுத்து பக்தா்களுக்கு தீா்த்தம், பிரசாதம், ஸ்ரீ ராமாநுஜா் நூற்றந்தாதி புத்தகம் விநியோகிக்கப்பட்டது.

பின்னா் குடியாத்தம் தமிழ் புலவா், முனைவா் தமிழ் திருமால் ஸ்ரீ ராமானுஜா் அவதார சிறப்பு குறித்து உபன்யாசம் செய்தாா். அதை தொடா்ந்து உலகப் பொது நன்மைக்காக ஸ்ரீ ராம நாம ஜெபம் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெருமாள் கோயில்களில்...திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில், ஹவுசிங்போா்டு ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில்,கோவிந்தாபுரம் பெருமாள் கோயில்,கந்திலி,ஜோலாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் ஸ்ரீ ராமானுஜா் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com