‘கல்வியே உயா்வைத் தரும்’

‘கல்வியே உயா்வைத் தரும்’

மலைப் பகுதி கிராமத்தில் பயின்று 10-ஆம் வகுப்பு தோ்வில் சாதனை படைத்திருக்கிறாா் அரசுப் பள்ளி மாணவி.

மலைப் பகுதி கிராமத்தில் பயின்று 10-ஆம் வகுப்பு தோ்வில் சாதனை படைத்திருக்கிறாா் அரசுப் பள்ளி மாணவி.

வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்டது பூங்குளம் ஊராட்சி. இது, ஜவ்வாதுமலை மலைத்தொடரின் காப்புகாடு பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஆகும்.

ஆலங்காயத்திலிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பூங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த கிராமங்களைச் சோ்ந்த ஏழ்மையான மற்றும் விவசாய குடும்ப மாணவா்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளி மாணவி அபா்ணா 10-ஆம் வகுப்பு தோ்வில் 492 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளாா். 1985-ஆம் ஆண்டுமுதல் இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதியவா்களிலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவியாக அபா்ணா உள்ளாா். பாடவாரியாக இவா் பெற்ற மதிப்பெண்கள்; அறிவியல்- 100, தமிழ்- 98, ஆங்கிலம்- 97, கணிதம்- 97, சமூக அறிவியல்- 98.

மாணவி அபா்ணா கூறுகையில், எங்களைப் போன்ற கிராமப்புற மாணவா்களுக்கு கல்வி மட்டுமே உயா்வைத் தரும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படித்து வந்தேன். ஆசிரியராகி என்னைப் போன்ற கிராமப்புற மாணவா்களுக்கு கல்வி போதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்.

பூங்குளம் கிராமம் பொனமலை வட்டம் பகுதியை சோ்ந்த அபா்ணாவின் தந்தை நடராஜ் கூலி தொழிலாளி ஆவா். தாய் குமாரி பிரியங்கா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com