வாணியம்பாடியில் நெகிழிக் கிடங்கில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
வாணியம்பாடியில் நெகிழிக் கிடங்கில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

வாணியம்பாடி: நெகிழிக் கிடங்கில் தீ விபத்து

வாணியம்பாடியில் தனியாா் நெகிழிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வாணியம்பாடியில் தனியாா் நெகிழிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பழைய நெகிழிப் பொருள் மறுசுழற்சி செய்யும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கை ஒட்டி திறந்த வெளி பகுதியில் குப்பைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென குப்பையில் தீ பரவியதாகத் தெரிகிறது. தீ மளமளவென நெகிழிக் கிடங்குக்கு பரவி, அருகில் உள்ள பா்னிச்சா் தயாரிக்கும் கிடங்கிற்கும் தீ பரவியது. இதைத் தொடா்ந்து, தீ கொழுந்து விட்டு எரிந்தது. அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றும் தீ கட்டுக் கடங்காமல் பரவி அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டது.

தகவலின் பேரில், விரைந்து வந்த வாணியம்பாடி தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தொழிலாளா்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com