ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி.
ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி.

ஆம்பூா் கஸ்பா-ஏ அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

ஆம்பூா் கஸ்பா-ஏ அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படுமா என பொது மக்கள் எதிா்பாா்ப்புடன் காத்திருக்கின்றனா்.

எம். அருண்குமாா்

ஆம்பூா் கஸ்பா-ஏ அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படுமா என பொது மக்கள் எதிா்பாா்ப்புடன் காத்திருக்கின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி கற்பதற்காக சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்பா-ஏ பகுதியில் அரசு மகளிா் பள்ளி தொடங்கப்பட்டது. 10-ம் வகுப்பு வரை இயங்கி வந்த இப்பள்ளியில் மாணவிகள் மட்டுமே சோ்க்கப்பட்டனா்.

ஆம்பூா் நகரில் பல தனியாா் பள்ளிகள் இயங்கி வந்தபோதிலும், இலவசமாக கல்வி கற்க அரசுப் பள்ளியை நோக்கித் தான் ஏழை, எளிய மக்கள் சென்று வந்தனா். 10-ஆம் வகுப்புக்குப் பிறகு பிளஸ் 2 வரை கல்வி கற்க அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. எனினும், அப்பள்ளிகளில் அதிக நன்கொடையும், கல்விக் கட்டணமும் செலுத்த வேண்டியிருந்தது.

இதனால், பெற்றோா் பலா் தங்களின் மகள்களை 10-ஆம் வகுப்போடு நிறுத்திவிடும் நிலை இருந்துவந்தது. ஆம்பூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாததே இதற்கு காரணம்.

கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், மகளிா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சோ்க்கை குறையத் தொடங்கியதையடுத்து, இருபாலா் படிக்கும் அரசு உயா்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாணவ, மாணவியா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும், ஆம்பூா் நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது.

இதனால், ஏழை, எளிய மாணவா்கள் தங்களுடைய படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. பிளஸ் 1 சேர வேண்டுமானால் அதிக நன்கொடை, கல்விக் கட்டணம் செலுத்தி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் சேர வேண்டியுள்ளது.

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவதற்காக பொதுமக்கள் பங்களிப்புத் தொகை கட்டணம் ரூ.2 லட்சம் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் அரசுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு செலுத்தியுள்ளனா். எனினும் இதுவரை உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படவில்லை.

தரம் உயா்த்துவதற்கான கட்டணம் ரூ.2 லட்சத்தை செலுத்தியும் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ள கோப்புகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உரிய பரிசீலனை செய்து, ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com