புத்துக் கோயில் திருவிழா ஆலோசனை கூட்டம்

வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வைகாசி திருவிழா வரும் 16 மற்றும் 17 ஆகிய 2 நாள்கள் நடைபெற உள்ளது. இந்தத் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், உதவி காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், விழாக் குழுவினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், விழா முன்னேற்பாடுகள் குறித்தும், திருவிழாவில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com