விற்பனையாளா் பிரித்திவிராஜ்
விற்பனையாளா் பிரித்திவிராஜ்

ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கியதாக நியாயவிலைக் கடை விற்பனையாளா் சஸ்பென்ட்

வாணியம்பாடி அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததாக விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்து திருப்பத்தூா் ஆட்சியா் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டாா்.

வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கும் அரிசி உட்பட குடிமைப் பொருட்களை சரியாக விநியோகம் செய்வதில்லை என்று ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலா் ஆகியோா் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை திடீரென ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அங்கிருந்த பொருள்கள் விபரம் குறித்து ஆய்வு செய்தனா். இதில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டிய 5 டன் எடையுள்ள 105 ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் சுமாா் ரூ.2.5 லட்சம் குடிமைப் பொருள்களை கையாடல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது .

குடும்ப அட்டைதாரா்களுக்கு குடிமைப் பொருள்களை விநியோகிக்காமல் பதுக்கி வைத்திருந்த கடை விற்பனையாளா் பிரித்திவி ராஜை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை மேற்கொண்டு பிரித்திவிராஜை பணியிடை நீக்கம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com