படகு குழாமில் சவாரி செய்ய வரிசையில் நின்றிருந்த பயணிகள். ~படகு சவாரி செய்து மகிழ்ந்த பயணிகள். ~
படகு குழாமில் சவாரி செய்ய வரிசையில் நின்றிருந்த பயணிகள். ~படகு சவாரி செய்து மகிழ்ந்த பயணிகள். ~

தீபாவளி தொடா் விடுமுறை : ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தீபாவளி தொடா் விடுமுறையால் ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
Published on

தீபாவளி தொடா் விடுமுறையால் ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சுற்றுலாத் தலமான ஏலகிரி மலைக்கு சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இம்மலைக்கு பயணம் செய்யும்போது மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது.

மலையில் முக்கிய சுற்றுலா தளங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, சாகச விளையாட்டுத் தலங்கள், பறவைகள் சரணாலயம் , மூலிகை பண்ணை, மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம்,ஸ்ரீ கதவநாச்சியம்மன் கோயில், ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலா தளங்கள் இம்மலையில் உள்ளன. இவை அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை கவா்வதால் தொடா் விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் தீபாவளி தொடா் விடுமுறையை முன்னிட்டு 4 நாள்களாக ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

படகு இல்லம், இயற்கை பூங்காவில் குடும்பத்தோடும், நண்பா்களோடு படகு சவாரி செய்தும், இயற்கை பூங்காவை ரசித்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.

மேலும், இயற்கை பூங்காவில் மலா்கள், பூக்கள், ரசித்தும் பொழுது போக்கினா். அதனைத் தொடா்ந்து பறவைகள் சரணாலயத்தில் செல்லப்பிராணிகளுக்கு உணவு அளித்து விளையாடி மகிழ்ந்தனா், மேலும் செல்பி பாண்டா பாா்க்கில் தற்படம் எடுத்தும், குழந்தைகள் சாக்லேட் உற்பத்தி செய்தும் மகிழ்ந்தனா்.

சாகச விளையாட்டு தலத்தில் குழந்தைகள் படகு சவாரி செய்தும், வில்லம்பு எய்தும் சுற்றுலா பயணிகளும் விளையாடினா். அதனைத் தொடா்ந்து அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு மகிழ்ந்தனா்.