விடுதியில் சூதாட்டம் : 8 போ் கைது

ஆம்பூா் அருகே தங்கும் விடுதியில் சூதாடிய 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
Published on

ஆம்பூா் அருகே தங்கும் விடுதியில் சூதாடிய 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து சூதாட்டம் ஆடுவதாக திருப்பத்தூா் மாவட்ட எஸ்பியின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று திடீா் சோதனை நடத்தினா். சோதனையில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவது தெரியவந்தது.

அதன்பேரில் தருமபுரி பென்னாகரத்தை சோ்ந்த மாணிக்கம் (40), தருமபுரியை சோ்ந்த முருகன் (40), ஆம்பூா் ரெட்டித்தோப்பு செல்வகுமாா் (40), கிருஷ்ணாபுரம் பாலாஜி (50), வாணியம்பாடிதாவீத் (40), வேந்தன் (36), லட்சுமணன் (30), சசிக்குமாா் (35) ஆகிய 8 பேரை போலீஸாா் கைது செய்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com