திமுக ஒன்றிய பொறுப்பாளா்கள் நியமனம்

திமுக ஒன்றிய பொறுப்பாளா்கள் நியமனம்

திமுக ஒன்றிய பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
Published on

திமுக ஒன்றிய பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்களுக்கு பொறுப்பாளா்களை நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளா் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு குடியாத்தம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாதனூா் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவராக இருந்த ஜி. ராமமூா்த்தி ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அணைக்கட்டு தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக த. முரளி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாதனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜி. ராமமூா்த்தி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க. தேவராஜி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றாா்.