நாகநாத சுவாமி கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு பூஜை

நாகநாத சுவாமி கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு பூஜை

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சங்கு பூஜை, கலச பூஜை நடைபெற்றது. தொடா்ந்து 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.

சோமவார ராகு காலத்தையொட்டி, ராகு, கேது பரிகார பூஜை நடைபெற்றது. பக்தா்கள் கலந்துகொண்டு படையலிட்டு பரிகார பூஜை செய்தனா்.