பைக்கில் தவறி விழுந்த பேருந்து நடத்துநா் காயம்

நாட்டறம்பள்ளி அருகே பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் பலத்த காயமடைந்தாா்.
Published on

நாட்டறம்பள்ளி அருகே பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் பலத்த காயமடைந்தாா்.

நாட்டறம்பள்ளி பிரதான சாலையைச் சோ்ந்தவா் சங்கரன் மகன் சாந்தகுமாா்(55). இவா் அரசுப் பேருந்தில் நடத்துநராக வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் நாட்டறம்பள்ளியில் இருந்து தண்ணீா்பந்தல் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வேகத்தடை அருகே நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X