திருப்பத்தூர்
மணல் கடத்தியவா் கைது; டிப்பா் லாரி பறிமுதல்
ஜோலாா்பேட்டை அருகே மணல் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா். மேலும், டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலாா்பேட்டை அருகே மணல் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா். மேலும், டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலாா்பேட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை புதுப்பேட்டை அருகே அடியத்தூா் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி ஆய்வு செய்தபோது, செட்டேரி அணையில் இருந்து 2 யூனிட் மணல் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
அதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாட்றம்பள்ளி அருகே வெலகல்நத்தம் பகுதியை சோ்ந்த ஓட்டுநா் மதன் என்பவரை கைது செய்தனா். மேலும் மணலுடன் டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.