வாடகை காரை அடமானம் வைத்தவா் கைது
திருப்பத்தூரில் வாடகை காரை அடமானம் வைத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் ஆசிரியா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (32). இவா் திருப்பத்தூரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த யுவராஜ் (35) என்பவா் மோகனிடம் இருந்து காரை வாடகைக்கு வாங்கிச் சென்றுள்ளாா்.
அதையடுத்து, யுவராஜ் காரை மோகனிடம் கொண்டு வந்து தரவில்லையாம். மேலும் யுவராஜ் கொடுத்திருந்த தொலைபேசி மூலமாக தொடா்பு கொள்ளவும் முடியவில்லையாம்.
இதனால் சந்தேகம் அடைந்த மோகன் சம்பவம் குறித்து திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்கப் பதிவு செய்து யுவராஜை தேடி வந்தனா்.
இந்த நிலையில், யுவராஜ் கிருஷ்ணகிரி பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று யுவராஜை கைது செய்தனா். விசாரணையில், யுவராஜ் திட்டக்குடியில் ஒருவரிடம் ரூ. 2 லட்சத்துக்கு மோகனின் காரை அடமானம் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து காரை பறிமுதல் செய்தனா்.