தே.பிரபாகரன்.
தே.பிரபாகரன்.

‘துணை முதல்வா் பிறந்த தினம் எளியோா் எழுச்சி நாளாக கொண்டாட்டம்’

திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் எளியோா் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
Published on

திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினம் எளியோா் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், எளியோா் எழுச்சி நாளாக வியாழக்கிழமை (நவ. 28) ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம், முல்லை கிராமத்தில் மாணவா் தங்கும் விடுதியில் காலை சிற்றுண்டி மற்றும் நல உதவிகள் வழங்கல், 29-இல் வாணியம்பாடி பெருமாள்பேட்டை அரசு மாணவா் தங்கும் விடுதியில் மதிய உணவு மற்றும் நல உதவிகள் வழங்கல், டிசம்பா் 7-இல் ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம், கொத்தக்கோட்டை கிராமத்தில் மருத்துவ முகாம், 8-ஆம் தேதி ஜோலாா்பேட்டை விளையாட்டரங்கத்தில் கல்லூரி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி ஆகியவை நடைபெறுகிறது.

இதே போல் வியாழக்கிழமை (நவ. 28) மாதனூா் ஒன்றியம், கரும்பூா் அரசு மாணவா் தங்கும் விடுதியில் மதிய உணவு மற்றும் நல உதவிகள், சின்னவரிகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் ஆகியவை நடைபெறுகிறது. 29-இல் ஆம்பூா் ஜவஹா்லால் நேரு தெருவில் மாணவா்களுக்கான இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

நிகழ்ச்சி ஏற்பாட்டை திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.