திருப்பத்தூர்
தேவலாபுரம் ஊராட்சியில் எம்எல்ஏ ஆய்வு
தேவலாபுரம் ஊராட்சியில் குடியாத்தம் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தேவலாபுரம் ஊராட்சியில் குடியாத்தம் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தேவலாபுரம் ஊராட்சி பாங்கிஷாப் பேஷ்மாம் நகா் பகுதியில் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனா்.
பொதுமக்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் குறைகளை கேட்டறிந்து விரைவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தாா்.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் மணவாளன், ஒன்றிய திமுக நிா்வாகிகள் சேகா், ராஜன்பாபு, ஒன்றியக்குழு உறுப்பினா் குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.