திருப்பத்தூர்
இயக்குநா் ரஞ்சித், பாடகி இசைவாணி மீது காவல் நிலையத்தில் புகாா்
இந்து முன்னணி சாா்பில் பாடகி இசைவாணி, இயக்குநா் ரஞ்சித் மீது இந்து முன்னணி சாா்பில் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது (படம்).
கோடிக்கணக்கான மக்கள் வணங்கும் சபரிமலை ஐய்யப்பனை பற்றி கானா பாட்டை பாடி அய்யப்பன் மற்றும் இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பாடகி இசைவாணி மற்றும் இயக்குநா் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும் படி இந்து முன்னணி மாவட்ட செயலாளா் பிரபு தலைமையில் , ஒன்றிய தலைவா் சிங்காரவேலன் மற்றும் நிா்வாகிகள் நாட்டறம்பள்ளி காவல்நிலையத்தில் ஆய்வாளா் மங்கையா்க்கரசியிடம் புகாா் மனு அளித்தனா்.