100 நாள் வேலை பணியாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

100 நாள் வேலைத் திட்ட பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம் துத்திப்பட்டு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

100 நாள் வேலைத் திட்ட பணியாளா்களுக்கு கண் பரிசோதனை முகாம் துத்திப்பட்டு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளா்களுக்கு ஊராட்சி மன்றம் சாா்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பிரமணி, குமரேசன், அண்ணாதுரை, ஊராட்சி செயலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா். சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com