திருப்பத்தூர்
நகை வாங்குவது போல் நடித்து 9 பவுன் திருட்டு
நாட்டறம்பள்ளி நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாட்டறம்பள்ளி நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் விநாயகம் (50). இவா் நாட்டறம்பள்ளி பேருந்துநிலையம் அருகே நகைக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சுமாா் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நகைக் கடைக்கு வந்து,
அப்போது கடையில் தனியாக இருந்த ஊழியரை திசை திருப்பி கடையில் இருந்த சுமாா் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்றாா். இதுகுறித்து விநாயகம் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் கடையில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை பாா்த்த போது மா்மபெண் நகை திருடுவது தெரியவந்தது.