ஆம்பூரில் கனமழை

ஆம்பூரில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது.
Published on

ஆம்பூரில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது.

ஆம்பூரில் காலையிலிருந்தே கோடைக் காலம் போல கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளானாா்கள்.

இந்நிலையில் மாலை சுமாா் 6 மணிக்கு திடீரென தொடங்கிய கன மழை விடாமல் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. அதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கன மழை குறைந்தபோதிலும் விடாமல் தூரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

கன மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிந்த சூழ்நிலை நிலவியது.

X
Dinamani
www.dinamani.com