திருப்பத்தூர்
சேதமடைந்த பள்ளிக் கட்டடம் : குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு
அயித்தம்பட்டு கிராமத்தில் சேதமைடந்துள்ள பள்ளிக் கட்டடத்தை குடியாத்தம் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அயித்தம்பட்டு கிராமத்தில் சேதமைடந்துள்ள பள்ளிக் கட்டடத்தை குடியாத்தம் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மாதனூா் ஒன்றியம், அயித்தம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. அப்பள்ளி கட்டடத்தை குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் ஆய்வு செய்தாா். பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாக உறுதி அளித்தாா்.
ஆய்வின்போது மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ. சிவலிங்கம், மாதனூா் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவா் ஷா்மிலி மூா்த்தி, துணைத் தலைவா் ஜி. ராகேஷ், ஒன்றியக்குழு உறுப்பினா் மஞ்சுளா பரசுராமன், தலைமை ஆசிரியா் ஏ. பரிமேலழகன் உள்பட பலா் உடனிருந்தனா்.