6 கிலோ போதை பொருள் பறிமுதல்
வாணியம்பாடியில் பள்ளி அருகில் பெட்டிக் கடையில் 6 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் நகர காவல்ஆய்வாளா் மனோன்மணி மற்றும் போலீஸாா் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா்நகா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் தனியாா் பள்ளி அருகே பெட்டி கடை மீது சந்தேகம் ஏற்பட்டு சோதனை மேற்கொண்டனா்.
இதில் ஹான்ஸ், குட்கா உட்பட போதை பொருள்கள் வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அங்கிருந்து 6 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெட்டி கடை நடத்தி வந்த ஷாஹீன்(40) என்ற பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதே போல் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ ஹான்ஸ், கூல்லிப், பான் மசாலா பாக்கெட்டுகள் வைத்திருந்த விஜயா(48) என்பவரை தாலுகா போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.