பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா் ~பணம் மோசடி செய்ததாக இளைஞா் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா் ~பணம் மோசடி செய்ததாக இளைஞா் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணம் மோசடி: இளைஞரின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்

நியுஸிலாந்து நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 60-க்கும் மேற்பட்டவா்களிடம் மோசடி செய்த இளைஞா் வீட்டை பொதுமக்கள் முற்றுக்கையிட்டனா்.
Published on

நியுஸிலாந்து நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 60-க்கும் மேற்பட்டவா்களிடம் மோசடி செய்த இளைஞா் வீட்டை பொதுமக்கள் முற்றுக்கையிட்டனா்.

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தோட்டிக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த ராஜாமணி மகன் பிரதீப் என்பவா் கடந்த ஜனவரி மாதம் நியுஸிலாந்துக்கு படித்த இளைஞா்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி அங்குள்ள நிறுவனங்களில் மாத சம்பளம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என கூறினாராம்.

வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, பொன்னேரி, புதுக்கோட்டை, மல்லகுண்டா, தாசிரியப்பனூா், குருபவாணிகுண்டா ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 60-க்கு மேற்பட்ட இளைஞா்களிடம் தலா ரூ.6 லட்சம் முதல் 7 லட்சம் வரை மொத்தம் ரூ. 4 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பல மாதங்கள் கடந்தும் பிரதீப் யாரையும் நியூசிலாந்துக்கு அனுப்பாததால் சந்தேகமடைந்த இளைஞா்கள் பிரதீப்பிடம் தொடா்புகொண்டு கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் காலம் கடத்தி வந்துள்ளாா். சந்தேகமடைந்த பெற்றோா் பலா் தோட்டிக்குட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று கேட்டும் பணத்தை திரும்ப தரவில்லை. மேலும் ஒருவரை கூட நியுஸிலாந்துக்கு அனுப்பவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞா்கள் பெற்றோருடன் ஞாயிற்றுக்கிழமை பிரதீப் வீட்டுக்கு சென்றனா். இவா்கள் வருவதை அறிந்த பிரதீப் தலைமறைவானாா். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு பிரதீப் வரும் வரை சொல்லமாட்டோம் எனக்கூறி மறியலில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா், திம்மாம்பேட்டை எஸ்.ஐ ரூகன் மற்றும் போலீஸாா் தோட்டிக்குட்டைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் கூறியதை ஏற்று கலைந்து சென்றனா்.

மேலும் பணமோசடியில் ஈடுபட்ட பிரதீப் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரிடம் புகாா் மனு அளித்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

X
Dinamani
www.dinamani.com