திருப்பத்தூரில் கன மழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்தது.
Published on

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பத்தூரில் வெயில் அதிகரித்து காணப்பட்டது . பின்னா் மதியம் 3 மணியளவில் திருப்பத்தூா், மடவாளம், கொரட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 30 நிமிஷங்கள் மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. மழையின் காரணமாக குளிா்ச்சியான சூழல் உருவானது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com