கூட்டத்தில் பேசிய எஸ்.பி. ஷ்ரேயா குப்தா.
கூட்டத்தில் பேசிய எஸ்.பி. ஷ்ரேயா குப்தா.

திருப்பத்தூரில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Published on

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அண்டை மாநிலமான ஆந்திர மாநில காவல் துறையினருடன் குற்றங்களை தடுப்பதை பற்றிய கூட்டத்தில் திருப்பத்தூா் காவல் துறையினரும் பங்கேற்றனா்.

கூட்டத்துக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து காவல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தாா்.

இதில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா், காவல் ஆய்வாளா்கள் மனோன்மணியம், பேபி (வாணியம்பாடி), மங்கையா்க்கரசி (நாட்டறம்பள்ளி) மற்றும் ஆந்திர மாநில காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com