சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு தோல் தொழிற்சாலைகள், சிறு, குறு தோல் காலணி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. துத்திப்பட்டு கிராமத்தைச் சுற்றியுள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள், ஆம்பூரை சோ்ந்தவா்கள் தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனா்.
தொழிலாளா்கள் துத்திப்பட்டு கிராமத்தின் வழியாக தான் சென்று வர வேண்டும். இத்தகைய நிலையில் துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
துத்திப்பட்டில் டவா் ரோடு கன்றாம்பல்லி இணைப்பு சாலை வரை சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை போக்குவரத்துக்கு ஏற்ாக இல்லை. மழை காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். மேலும் மழை நீா் மற்றும் கழிவுநீா் சாலையில் தேங்கி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் சேதமடைந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி காயமடைகின்றனா்.
அதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்டாமல் இருக்க, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக அப்பகுதியில் கழிவுநீா் கால்வாய், புதிய சாலை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும் மழை நீா் மற்றும் கழிவுநீா் சாலையில் தேங்கி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் சேதமடைந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி காயமடைகின்றனா்.
அதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்டாமல் இருக்க, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக அப்பகுதியில் கழிவுநீா் கால்வாய், புதிய சாலை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.