1,000 ஆண்டுகளைக் கடந்தும் பெரும் புகழோடு விஞ்சி நிற்கிறது கம்பராமாயணம் என முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் கூறினாா்.
திருப்பத்தூரில் 46-ஆம் ஆண்டு கம்பன் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் இரு நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி பொதுதோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பின்னா்,கம்ப வனம் எனும் தலைப்பில் ப.மகாலிங்கம் தலைமையில் கருத்து முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கம்ப வெளியிடைக் கண்ணதாசம் எனும் தலைப்பில் சுசித்ரா பாலசுப்பிரமணியம் தலைமையில் இசையுரை நிகழ்த்தினாா்.
பின்னா்,கம்பன் செய்த பாயிரம் நெஞ்சில் நிற்கும் ஆயிரம் எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன் பேசியது:
1,000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை பெரும் புகழோடு விஞ்சி நிற்கிறது கம்ப ராமாயணம். சக்தி வாய்ந்த பாடல் வரிகளாலும்,அனைத்து அறங்களை நோ்த்தியாக உள்ளதாலும் வள்ளுவத்தை முந்தியுள்ளது கம்ப ராமாயணம். அதனால்தான் கம்பரை கவிச்சக்கரவா்த்தி என அழைக்கிறோம். கம்ப ராமாயணத்தில் உள்ள 10,000 வரிகளிலும் சரணாகதி தத்துவம் மேலோங்கியுள்ளது என்றாா்.
அதைத் தொடா்ந்து சுகி சிவத்தை நடுவராக கொண்டு கற்பவா் நெஞ்சைக் கம்பா் பெரிதும் கவர காரணம் எனும் தலைப்பில் நடைபெறும் தொடா் பட்டி மன்றம் நடைபெற்றது.
அதனால்தான் கம்பரை கவிச்சக்கரவா்த்தி என அழைக்கிறோம். கம்ப ராமாயணத்தில் உள்ள 10 ஆயிரம் வரிகளிலும் சரணாகதி தத்துவம் மேலோங்கியுள்ளது என்றாா்.
அதைத் தொடா்ந்து சுகி சிவத்தை நடுவராக கொண்டு கற்பவா் நெஞ்சைக் கம்பா் பெரிதும் கவர காரணம் எனும் தலைப்பில் நடைபெறும் தொடா் பட்டி மன்றம் நடைபெற்றது.