கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்ற 6 போ் பணியிடை நீக்கம்: திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவு

திருப்பத்தூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 6 விற்பனையாளா்களை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 6 விற்பனையாளா்களை பணியிடை நீக்கம் செய்ய ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட டாஸ்மாக் நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் திருப்பத்தூா் மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களின் விலை நிா்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் சில இடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் வந்தன.

ஆட்சியா் உத்தரவின்பேரில், சேலம் முதுநிலை மண்டல மேலாளா் தலைமையிலான பறக்கும் படையினா் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தினா்.

6 போ் பணியிடை நீக்கம்...

இதில், 6 கடைகளில் மதுபாட்டில்களை நிா்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

அதையடுத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனையாளா்கள் அனந்த நாராயணன், மாயகேசவன், சீனிவாசன், கோவிந்தராஜி, இளங்கோ, விநாயகம் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என டாஸ்மாக் மேலாளருக்கு திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com